About Us

டிரஸ்ட்

ஸ்ரீ ஸ்ரீதர் குருஜி அவர்கள் வலி காட்டுதலின் கீழ் சென்னையில் உள்ள ஸ்ரீஜ்வாலா டிரஸ்ட் பல்வேறு தர்ம காரியங்களையும் சமூக சேவைகளையும் ஆற்றி வருகிறது.

இதை தவிர லோகாயத பிரச்சனைகளிலிருந்து விடுபட பல்வேறு ஸ்தோத்ர மாலைகளை புத்தகங்களாக வெளியிட்டு இலவச விநியோகம் செய்து வருகிறோம்.

ஸ்ரீ ஸுதர்சன ஜோதி என்னும் ஆன்மிக மாத இதழை ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வருகிறோம். இதில் ஸ்ரீ குருஜி அவர்களின் செய்திகள், அனுக்ரஹ பாஷனம் (அருளுரை), கோவில் கதைகள், காவியக் கதைகள் ஆகியவை வெளிவருகின்றன.

ஸ்ரீ குருஜி

ஸ்ரீமஹா ஸுதர்சன ஜ்வாலா ந்ருஸிம்ஹ பீடத்தின் பீடாதிபதியாகிய பூஜ்ய ஸ்ரீ மஹாபூஜ்யர் ஸ்ரீ ஸ்ரீதர் குருஜி அவர்கள் சாயா அதர்வண வேதம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ண மோஹன வித்யா இவற்றின் குருபரம்பரையில் வந்துள்ள இறுதி ஆசாரியர் ஆவார். இந்த மகத்தான ஆன்மிகப் பாரம்பரியம், மனிதகுலத்தின் மேம்பாட்டுக்காக முன்னொரு காலத்தில் நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப் பட்டு வந்தது. இது இப்பொழுது முற்றிலும் அழிந்து வழக்கொழிந்து விட்டது. இந்த பயிற்சிகள், சுற்றுச் சூழல் மற்றும் மனிதனின் அகத்திலும் புறத்திலும் உள்ள பல்வேறு மாசுக்களைச் சுத்தம் செய்வதன் மூலம் தனிநபர் மற்றும் சமுதாயம் இவற்றின் முழுமையான வளர்ச்சிக்கு உதவுகின்றன.

குருஜியின் யாகங்களில் பங்கு பெரும் ஒவ்வொரு நபருக்கும் நல்ல ஆரோக்கியத்தைத் தரவல்ல பல்வேறு பிரயோக கத்யங்கள் இவற்றில் உள்ளன. இவை மிகவும் மோசமான நோய்களான புற்றுநோய், கட்டிகள், அழற்சி, இதய நோய்கள், சிறுநீரகக் கோளாறுகள், மனோவியாதிகள் போன்றவற்றையும் குணப்படுத்தி இவற்றின் தீவிரத் தன்மையைக் குறைக்க வல்லன. நோய்களைத் தவிர்ப்பதோடு, அகல மரணத்திற்கான சாத்தியப்பாடுகளையும் இவை தவிர்க்கின்றன. இந்த க்த்யங்களில், அமிர்தம் மற்றும் ஒளஷதம் ஆகிய இருவேறு கூறுகள் அடங்கியுள்ளன. மேலும் இப்பயிற்சிகள் மக்களின் சாதராண வாழ்வில் அவர்களுக்கு சகலவித சௌபாக்கியங்களையும் அருளி அவர்களை நல்லநிலையில் இருக்கச் செய்கின்றன.